என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டெல்லி கவர்னர் மாளிகை
நீங்கள் தேடியது "டெல்லி கவர்னர் மாளிகை"
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் ஜெஜ்ரிவால் மற்றும் துணைநிலை ஆளுநருக்கு இடையிலான மோதலில் பிரதமர் மோடியின் தலையீடு அவசியம் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். #MamataBanerjee #PMModi #Kejriwaldharna
புதுடெல்லி:
டெல்லியில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜால் கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.
இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.
பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இன்று ஏழாவது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்துள்ள மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் ஜெஜ்ரிவால் மற்றும் துணைநிலை ஆளுநருக்கு இடையிலான மோதலில் பிரதமர் மோடியின் தலையீடு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக முதல் மந்திரி குமாரிசாமி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் இணைந்து இந்த கோரிக்கையை பிரதமருக்கு முன்வைப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மம்தா, அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்தியுள்ள நாட்டின் கூட்டாட்சி என்னும் அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #MamataBanerjee #PMModi #Kejriwaldharna
டெல்லி கவர்னர் அலுவலகத்தில் தர்ணா நடத்திவரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, பினராயி விஜயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். #Kejriwaldharna #Delhilg #Mamata
புதுடெல்லி:
டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜால் கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.
இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.
பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இன்று ஏழாவது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் டெல்லி கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க கவர்னரிடன் அனுமதி கேட்டனர்.
ஆனால், இதற்கு கவர்னர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இந்நிலையில், நேற்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்ற மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, பினராயி விஜயன் ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாகின் மனைவியை சந்தித்து அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் இப்படி நடந்தால் மற்ற மாநிலங்களின் நிலைமை என்னவாகும்?. அரசியலமைப்பு சார்ந்த சிக்கலாக உருமாறும் முன்னர் இந்தப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக நேரிடும்.
இன்று பிரதமர் மோடியை சந்திக்கும்போது கவர்னர் - கெஜ்ரிவால் இடையே நடந்துவரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவேன் என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். #Kejriwaldharna #Delhilg #Mamata
டெல்லியில் ஆளுநர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பா.ஜ.க. தலைவவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #KejriwalProtest #DelhiBJP #AAPProtest #DelhiBJPHungerStrike
புதுடெல்லி:
டெல்லியில் ஐஏஸ் அதிகாரிகள் மாநில அரசுக்கு ஒத்துழைக்காமல் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று 5-வது நாளாக நீடிக்கிறது. ஆனால் அவர்களின் கோரிக்கை குறித்து ஆளுநர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
டெல்லி அரசின் செயல்பாடு முடங்கியிருப்பதற்கு மத்திய அரசும் துணை நிலை ஆளுநரும் காரணம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய பா.ஜ.க. அரசு தூண்டி விடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்
இது ஒருபுறமிருக்க, கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் போராட்டத்திற்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் போட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைமைச்செயலகத்தில் பா.ஜ.க. தலைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இன்று காலை முதல் பா.ஜ.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
மேற்குடெல்லி பா.ஜ.க. எம்.பி. பிரவேஷ் சிங் சாகிப் வர்மா. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா, மன்ஜிந்தர் சிங் சிர்சா எம்.எல்.ஏ.வுடன் இணைந்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்ததாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா எம்.எல்.ஏ. கூறினார்.
மேலும் போராட்டத்தை கைவிடும்படி கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் மிஸ்ரா கூறினார்.
இவ்வாறு போட்டி போட்டுக்கொண்டு இரு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருவதால் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KejriwalProtest #DelhiBJP #AAPProtest #DelhiBJPHungerStrike
பொது இடங்களில் சி.சி.டி.வி. திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுக்கும் டெல்லி கவர்னர் மாளிகைக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வரும் திங்கட்கிழமை பேரணியாக செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ArvindKejriwal #CCTVCamera #Kejriwal #AAPMLAs
புதுடெல்லி:
பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார்.
இந்நிலையில், பொது இடங்களில் சி.சி.டி.வி. திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுக்கும் டெல்லி கவர்னர் மாளிகைக்கு வரும் திங்கட்கிழமை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரணியாக செல்லப் போவதாக டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா இன்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, ‘டெல்லி முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் திட்டம் தொடர்பான முதல்கட்ட பணிகள் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இதற்கான டெண்டரும் விடப்பட்ட பின்னர் தற்போது இந்த திட்டத்தில் ஓட்டை கண்டிபிடித்து முடக்கிப்போட முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக, கவர்னர் அனில் பைஜாலை சந்தித்து வலியுறுத்துவதற்காக வரும் திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகைக்கு பேரணியாக செல்கின்றனர்.
இந்த தகவல் கடிதம் மூலம் கவர்னருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார். #ArvindKejriwal #CCTVCamera #Kejriwal #AAPMLAs
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X